அதிவேக நெடுஞ்சாலை பஸ் கட்டணங்கள் 2.5 வீதத்தால் அதிகரிப்பு

அதிவேக நெடுஞ்சாலை பஸ் கட்டணங்கள் 2.5 வீதத்தால் அதிகரிப்பு

அதிவேக நெடுஞ்சாலை பஸ் கட்டணங்கள் 2.5 வீதத்தால் அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

23 Jun, 2017 | 3:52 pm

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பஸ் கட்டணங்கள் சாதாரண பஸ் கட்டணங்களை விட 2.5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்தக் கட்டணங்கள் நடைமுறைக்கு வரவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர தெரிவித்தார்.

அதனடிப்படையில், அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறை – மஹரகம இடையேயான பயணக் கட்டணமான 500 ரூபா, 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

காலி – மஹரகம இடையேயான பஸ் கட்டணம் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய கட்டணம் 410 ரூபாவாக அறவிடப்படும்.

இதேவேளை, கடவத்தை – மாத்தறை வரையான பஸ் பயணங்களுக்கான கட்டணம் 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய கட்டணம் 540 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

கடவத்தை – காலி வரையான பயணக்கட்டணம் 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், புதிய கட்டணம் 440 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்