வெற்றிடமான அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றார் விக்னேஷ்வரன்

வெற்றிடமான அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றார் விக்னேஷ்வரன்

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2017 | 2:10 pm

வடமாகாணத்தில் வெற்றிடமான இரண்டு அமைச்சுக்களை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் இன்று பொறுப்பேற்றார்.

இதற்கமைய வடமாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சராக முதலமைச்சர் விக்னேஷ்வரன், ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தார்.

வடமாகாண அமைச்சர்களாக பதவி வகித்த, பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் ரி.குருகுலராசா ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதன் காரணமாக பதவி விலகியதை அடுத்து இந்த வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.

இந்த இரண்டு அமைச்சர்களையும் பதவிகளை தியாகம் செய்யுமாறு முதலமைச்சர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கு எதிராக ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது.

மாகாண சபை உறுப்பினர்களான கேசவன் சயந்தன், மற்றும் அயூப் அஸ்மின் ஆகியோர் இது தொடர்பிலான கடிதத்தை இன்று பிற்பகல் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்