பேஸ்புக் லைக்குகளுக்காக 15 ஆவது மாடியிலிருந்து  குழந்தையை கீழே போட்டு விடுவதாக மிரட்டிய  தந்தை

பேஸ்புக் லைக்குகளுக்காக 15 ஆவது மாடியிலிருந்து குழந்தையை கீழே போட்டு விடுவதாக மிரட்டிய தந்தை

பேஸ்புக் லைக்குகளுக்காக 15 ஆவது மாடியிலிருந்து குழந்தையை கீழே போட்டு விடுவதாக மிரட்டிய தந்தை

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2017 | 11:17 am

அல்ஜீரியாவில், பேஸ்புக்கில் 1000 லைக்குகளுக்காக 15 ஆவது மாடியிலிருந்து தனது குழந்தையை கீழே போட்டு விடுவதாக ஃபேஸ்புக்கில் மிரட்டிய குழந்தையின் தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அல்ஜீரியா நாட்டின் தலைநகர் அல்ஜியர்ஸில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் நபர் ஒருவர், அந்தக் குடியிருப்பின் 15 ஆவது மாடியின் ஜன்னல் வழியாக ஒரு குழந்தையை தூக்கிப்பிடித்து “1000 லைக்ஸ் வரவேண்டும். இல்லையெனில் குழைந்தையை கீழே போட்டுவிடுவேன்” என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த பலர், குழந்தையை கொடுமைப்படுத்தியதற்காக அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து, பொலிஸார் குறித்த நபரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்