பெருக்குவட்டுவான் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பெருக்குவட்டுவான் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பெருக்குவட்டுவான் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2017 | 2:42 pm

முந்தல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்தாந்தீவு பெருக்குவட்டுவான் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மதுரங்குளியில் இருந்து கொத்தாந்தீவு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் கொத்தாந்தீவில் இருந்து மதுரங்குளி நோக்கி சென்ற லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் கொத்தாந்தீவு கொலனியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் அதன் பின்னர் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் லொறியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

எனினும் அங்குள்ள மக்கள் குறித்த லொறியை தீயிட்டு கொளுத்த முற்பட்ட வேளையில் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை கிரித்தல பஹமுண வீதியின் மூன்றாம் கட்டை பகுதியில் சிறிய லொறி ஒன்று தீக்கிரையாகியுள்ளது.

பொலன்னறுவையிலிருந்து தியபெதும நோக்கி விதை நெல்லை ஏற்றி சென்ற சிறிய லொறியொன்றே சம்பவத்தில் தீப்பற்றியுள்ளது.

இயந்திரக் கோளாறு காரணமாக தீபரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமன்கடுவ பிரதேச தீயணைப்பு படையினர் தீயைக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் சிலாபம் கொழும்பு பிரதான வீதியின் மாரவில கொஸ்வாடிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மல்வானையிலிருந்து சிலாபம் நோக்கி பயணித்த லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று பேர் காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த ஏனைய இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்