டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட வைத்தியர்கள் நியமனம்

டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட வைத்தியர்கள் நியமனம்

டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட வைத்தியர்கள் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2017 | 9:06 am

விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட வைத்தியர்களை டெங்கு நோய் தாக்கத்திற்குட்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க நியமிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

டெங்கு நோய்த்தாக்கத்திற்கு உட்பட்ட நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகளில் விசேட வைத்திய நிபுணர்களை நியமிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

டெங்கு நோயளர்களின் பராமரிப்பிற்காக விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட தாதியர்களும் நியமிக்கப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

டெங்கு நோயைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் வகையில் நோயாளர்களை உடனடி சிகிச்சை பெறுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளளனர்.

டெங்கு நோயாளர்கள் அதிகம் அனுமதிக்கப்பட்டுள்ள பேராதனை வைத்தியசாலை மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலைக்கு முதல் கட்டமாக விசேட வைத்திய நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு நோய் தொடர்பிலான பரிசோதனை நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதி வைத்திய பணிப்பாளர் நாயகம் டொக்டர் அமல் த சில்வா தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்