கொஸ்கமயில் வர்த்தக நிலையமொன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது

கொஸ்கமயில் வர்த்தக நிலையமொன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது

கொஸ்கமயில் வர்த்தக நிலையமொன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2017 | 8:37 am

கொஸ்கம பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் நேற்றிரவு பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீபரவியதன் காரணமாக கொஸ்கம சந்தி வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த கொழும்பு அவிசாவளை பிரதான வீதியுடனான போக்குவரத்து மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

கொஸ்கம கனன்பால சந்தியில் அமைந்துள்ள நிறப்பூச்சு வர்த்தக நிலையத்தில் நேற்றிரவு 7 மணியளவில் தீப்பற்றியது.

தீயைக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியில் அவிசாவளை தீயணைப்பு பிரிவினரும், இராணுவத்தினரும் ஈடுபட்டிருந்ததுடன் பொலிஸாரும் தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

தீ பரவியமைக்கான காரணம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்