அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் முஸ்லிம்களை விலக்க சதித் திட்டம் – ஜனாதிபதி

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் முஸ்லிம்களை விலக்க சதித் திட்டம் – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2017 | 7:45 pm

2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்ய தமிழ்,முஸ்லிம் மக்கள் 90 வீத ஒத்துழைப்பை வழங்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கம் மீது அதிருப்தியை ஏற்படுத்தவும் அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் மக்களை தூரப்படுத்தவும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் முஸ்லிம்களை விலக்கவும் அரசியல் சதித் திட்டம் அரகேற்றப்பட்டுள்ளமையை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பில் நேற்று (20) நடைபெற்ற இப்தார் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மேலும் தெரிவித்த கருத்து..

[quote]நாட்டின் சிறுபான்மையினர் அன்று சமூகத்தில் எதிர்நோக்கிய பாரிய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சுதந்திரமாக வாழ்வதற்காக சூழலை ஏற்படுத்துவதற்காகவே நீங்கள் எனக்கு வாக்களித்து இந்த அரசாங்கத்தை ஸ்தாபித்தீர்கள். நீங்கள் எம்மோடு இணைந்து செயற்பட்டால், அரசாங்கமென்ற ரீதியில் நாம் பலமாக முன்னோக்கிச் செல்வோம் என்பதை, அன்று உங்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள் மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளனர்.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்