வட மாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக கிளிநொச்சியில் கையெழுத்து வேட்டை

வட மாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக கிளிநொச்சியில் கையெழுத்து வேட்டை

வட மாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக கிளிநொச்சியில் கையெழுத்து வேட்டை

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2017 | 7:26 am

வட மாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக இன்று (20) கிளிநொச்சியில் கையெழுத்து திரட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட ஜனநாயக இளைஞர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கையெழுத்துக்கள் திரட்டும் நடவடிக்கை கிளிநொச்சி பொதுச் சந்தை பகுதியில் இடம்பெற்றது.

இதன் போது பொதுமக்கள் பலரும் இணைந்து முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கு ஆதரவாக தமது கையெழுத்தை இட்டனர்.

கையொப்பம் இட்ட கடிதம் வட மாகாண ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட ஜனநாயக இளைஞர் அமைப்பினர் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்