வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா இராஜினாமா

வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா இராஜினாமா

எழுத்தாளர் Bella Dalima

20 Jun, 2017 | 8:09 pm

வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா இன்று தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

கல்வி அமைச்சரின் இராஜினாமா கடிதம் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஏற்கனவே வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் சமர்ப்பித்த இராஜினாமாக் கடிதத்தையும், அமைச்சர் த.குருகுலராசாவின் இராஜினாமாக் கடிதத்தையும் முதலமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

முதலமைச்சரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இரண்டு அமைச்சர்களினதும் இராஜினாமாக் கடிதங்களை இன்று வட மாகாண ஆளுநரின் செயலாளரிடம் தாம் கையளித்ததாக மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இதற்கமைய, வெற்றிடமான இரண்டு அமைச்சுக்களினதும் பொறுப்புக்களை முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் நாளை (21) தற்காலிகமாகப் பொறுப்பேற்கவுள்ளார்.

நாளை பிற்பகல் 3 மணிக்கு ஆளுநர் முன்னிலையில் முதலமைச்சர் வட மாகாண கல்வி மற்றும் விவசாய அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்,

தொடர்ந்து நாளை பிற்பகல் வட மாகாண அமைச்சரவை கூடவுள்ளதுடன், இதில் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனும், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கமும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் நியூஸ்பெர்ஸ்ட்டுக்குத் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்