வட கொரியாவால் கோமா நிலையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அமெரிக்க மாணவர் உயிரிழப்பு

வட கொரியாவால் கோமா நிலையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அமெரிக்க மாணவர் உயிரிழப்பு

வட கொரியாவால் கோமா நிலையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அமெரிக்க மாணவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

20 Jun, 2017 | 4:00 pm

வட கொரியாவால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் கோமா நிலைக்குச் சென்றதால் விடுவிக்கப்பட்ட அமெரிக்க மாணவர் ஒட்டோ வார்ம்பியர் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் வெர்ஜீனியா பல்கலைக்கழக மாணவரான ஒட்டோ வார்ம்பியர் (22) கடந்தாண்டு வடகொரியா சென்றிருந்தபோது, அந்நாட்டு அரசால் உளவுக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

வட கொரிய அரசின் பிரசார சுவரொட்டியைத் திருட முயன்ற குற்றச்சாட்டில், அவருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், வாம்பியரின் உடல்நிலை மோசமாகி கோமா நிலைக்கு சென்றதால், கடந்த வாரம் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்த வாம்பியர் இன்று உயிரிழந்தார்.

வாம்பியர் கோமா நிலைக்கு சென்றதற்கு வட கொரிய அரசின் கொடூர சித்திரவதைகள் தான் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

வாம்பியரின் மரணத்தையடுத்து, வட கொரியாவில் மிருகத்தனமான ஆட்சி நடப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்