ரயில்வே லொக்கோமோடிவ் பொறியியலாளர் சங்கம் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில்

ரயில்வே லொக்கோமோடிவ் பொறியியலாளர் சங்கம் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில்

ரயில்வே லொக்கோமோடிவ் பொறியியலாளர் சங்கம் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில்

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2017 | 12:12 pm

இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே லொக்கோமோடிவ் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

17 வருடங்களாக பதவி உயர்வுகளை வழங்காதிருத்தல் உள்ளிட்ட பல காரணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சங்க நடவடிக்கைக்கு ரயில்வே சாரதிகள் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஒன்றிணைந்த ரயில்வே சேவை தொழிற்சங்க முன்னணி இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என குறிப்பிட்டுள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கை குறித்து என்று விசேட பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளதாக லொக்கோமோடிவ் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் லால் பரணவிதான தெரிவித்துள்ளார்.

இன்று முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை குறித்து போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்கவிடம் நாம் வினவினோம்.

லொக்கோமோடிவ் பொறியிலாளர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகவும், அதனை தொடர்ந்து இன்று முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்