ட்ரம்பை நான் காதலிக்கவில்லை: பிரான்ஸின் முன்னாள் அதிபர் மனைவி

ட்ரம்பை நான் காதலிக்கவில்லை: பிரான்ஸின் முன்னாள் அதிபர் மனைவி

ட்ரம்பை நான் காதலிக்கவில்லை: பிரான்ஸின் முன்னாள் அதிபர் மனைவி

எழுத்தாளர் Bella Dalima

20 Jun, 2017 | 4:41 pm

பிரான்ஸின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியின் மனைவி கர்லா புரூனி, தான் ஒருபோதும் அமெரிக்க அதிபர் ட்ரம்பைக் காதலித்தது இல்லை என கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கர்லா புரூனி காதலித்ததாகவும், ட்ரம்பின் இரண்டாவது மனைவி விவாகரத்துப் பெற புரூனிதான் காரணம் எனவும் செய்திகள் பரவின.

அதை அப்போது ட்ரம்ப் மறுத்தார். பின்னர் அது உண்மைதான் என கூறியிருந்தார்.

ஆனால், அதற்கு கர்லா புரூனி மறுப்புத் தெரிவித்துள்ளார்.

”ட்ரம்ப் எவ்வாறு இப்படி கூறினார் என்று தெரியவில்லை. ஆனால், நான் ஒருபோதும் ட்ரம்பைக் காதலித்தது இல்லை,” என கூறியுள்ளார்.

கர்லா புரூனி முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு, இரண்டாவதாக பிரான்ஸின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியை 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது கர்லா புரூனிக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது பெரும் சர்ச்சையாக பேசப்பட்ட செய்திக்கு கர்லா புரூனி தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்