சம்பந்தனுக்கும் விக்னேஷ்வரனுக்கும் இடையிலான சமரசத்தை ஏற்றுக்கொண்டது தமிழரசுக் கட்சி

சம்பந்தனுக்கும் விக்னேஷ்வரனுக்கும் இடையிலான சமரசத்தை ஏற்றுக்கொண்டது தமிழரசுக் கட்சி

எழுத்தாளர் Bella Dalima

20 Jun, 2017 | 7:22 pm

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனுக்கும் இடையிலான சமரசத்தை இலங்கை தமிழரசுக் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்காக செயற்பட்ட சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சந்திப்பின் பின்னர் மாவை சேனாதிராஜா ஊடங்களுக்கு பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,

[quote]ஏற்பட்டுள்ள சமரசத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளேன். அவர்கள் அனைவரும் அந்த சமரசத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இரண்டாவதாக அந்த சமரசத்தின் அடிப்படையிலும் மதத் தலைவர்களின் வேண்டுகோளின் அடிப்படையிலும் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலும் நாங்கள் பேச இருக்கின்றோம். அந்த சமரசம் வெற்றி பெறும் என்று நாங்கள் நினைக்கின்றோம். சட்ட ரீதியில் அந்தக் கடிதத்தை திரும்பப் பெறுவதைப் பற்றியும் நாங்கள் ஆராய்ந்திருக்கிறோம்.[/quote]

என குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்