ஒஸ்கார் விருதினை அமெரிக்க அரசிடம் திருப்பிக் கொடுத்தார் டிகாப்ரியோ

ஒஸ்கார் விருதினை அமெரிக்க அரசிடம் திருப்பிக் கொடுத்தார் டிகாப்ரியோ

ஒஸ்கார் விருதினை அமெரிக்க அரசிடம் திருப்பிக் கொடுத்தார் டிகாப்ரியோ

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2017 | 11:34 am

டைட்டானிக்’ படத்தில் ஜெக் கதாபாத்திரத்தில் நடித்த ஹொலிவுட் பிரபலம் லியானார்டோ டிகாப்ரியோ, அவருக்கு பரிசாக வழங்கப்பட்ட ஒஸ்கார் விருதை அமெரிக்க அரசிடம் திரும்பக் கொடுத்துள்ளார்.

டிகாப்ரியோ, கடந்த ஆண்டு வெளியான `தி ரெவணன்ட்’ படத்திற்காக ஒஸ்கார் விருதினை வென்றார்.

அதற்கு முன்னதாகவே `த வோல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’ படத்தில் நடித்திருந்தார், அந்த படத்தின் வெற்றியை அடுத்து அந்த படத்தை தயாரித்த நிறுவனமான, அன் த வாட்டர்பிரண்ட் படத்திற்கான பிரபல ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ பெற்ற ஒஸ்கார் விருதை டிகாப்ரியோவின் 38 ஆவது பிறந்தநாள் பரிசாக கடந்த 2012 ஆம் ஆண்டு வழங்கியிருந்தது.

இந்நிலையில், அந்த நிறுவனத்தின் மீது நிதி மோசடி புகார் வந்துள்ளதை அடுத்து, அந்த நிறுவனம் கொடுத்த ஒஸ்கார் விருதை டிகாப்ரியோ அமெரிக்க அரசிடம் ஒப்படைத்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் அந்த நிறுவனம் பரிசாக அளித்த உலக புகழ் பெற்ற பிகாசோ ஓவியம் உள்ளிட்ட மேலும் சில விலையுயர்ந்த பரிசுகளையும் அவர் திருப்பி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்