இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் பயணித்த வாகனம் விபத்திற்குள்ளானது

இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் பயணித்த வாகனம் விபத்திற்குள்ளானது

இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் பயணித்த வாகனம் விபத்திற்குள்ளானது

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2017 | 1:45 pm

சர்வதேச யோகா தினம் இன்றாகும், இதனை முன்னிட்டு மட்டக்களப்பு யோகா ஆரோக்கிய இளைஞர் சங்கம் சிறப்பு யோகாசன நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வுகள் இன்று காலை இடம்பெற்றன.

மட்டக்களப்பு பெவர் மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

சிறப்பு யோகாசன நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றிருந்தன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,எஸ்.வியாழேந்திரன் மற்றும் க.கோடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை இன்று காலை குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பிய கல்வி இராஜாங்க அமைச்சரின் வாகனமும் அவருடன் சென்ற இன்னுமொரு வாகனமும் சிறு விபத்திற்குள்ளானதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

எனினும் இதன்போது எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்