அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய சீருடைகள்: கல்வி அமைச்சு தீர்மானம்

அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய சீருடைகள்: கல்வி அமைச்சு தீர்மானம்

அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய சீருடைகள்: கல்வி அமைச்சு தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2017 | 7:12 am

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்ட 58,000 அதிகமான பாடசாலை மாணவர்களுக்கு, சீருடைகள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன் முதல் கட்டாக, மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படவுள்ளன.

மேலும், மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரன தெரிவித்துள்ளார்.

கொழும்பு , சப்ரகமுவ மாகாணம் மற்றும் தென் மாகாணம் ஆகிய பகுதிகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்