வெஸ்டோல் பிரதேச வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியரொருவரை நியமிக்குமாறு மக்கள் கோரிக்கை

வெஸ்டோல் பிரதேச வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியரொருவரை நியமிக்குமாறு மக்கள் கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

18 Jun, 2017 | 7:27 pm

நாவலப்பிட்டி – வெஸ்டோல் பிரதேச வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியரொருவரை பெற்றுத்தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

15 தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 6000 இற்கும் மேற்பட்டோர், நோய் வாய்யப்படும் பட்சத்தில் இந்த வைத்தியசாலையிலேயே சிகிச்சை பெற வேண்டியுள்ளது.

எனினும், இந்த வைத்தியசாலையில் கடந்த 8 மாதங்களாக நிரந்தர வைத்தியரொருவர் சேவையில் இல்லை என பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வாரத்திற்கு ஒரு முறையே வைத்தியரொருவர் கடமையில் ஈடுபடுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் காரணமாக, சுமார் 25 கிலோமீற்றர் தொலைவிலுள்ள நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கே செல்ல வேண்டியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

நாவலப்பிட்டி – வெஸ்டோல் பிரதேச வைத்தியசாலைக்கு விரைவில் நிரந்தர வைத்தியரொருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பதே இந்த மக்களின் கோரிக்கையாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்