வட மாகாண முதலமைச்சருக்கு மேலும் பல தரப்பினர் ஆதரவு

வட மாகாண முதலமைச்சருக்கு மேலும் பல தரப்பினர் ஆதரவு

எழுத்தாளர் Staff Writer

18 Jun, 2017 | 7:59 pm

முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காவிட்டாலும், இன்றும் பலர் முதல்வரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

வட மாகாண மருத்துவர் மன்றத்தின் பிரதிநிதிகள் பலரும், வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினர்.

25 வைத்தியர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, வட மாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக அண்மையில் கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தவரும், இன்று முதலமைச்சரை சந்தித்தார்.

மேலும், வட மாகாண சபை உறுப்பினர்களான செ.மயூரன், க.சிவநேசன், ஆர்.இந்திரராஜா, ஏ.புவனேஸ்வரன், தியாகராசா ஆகியோர் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை இன்று சந்தித்து கலந்துரையாடினர்.

இதேவேளை வடமாகாண சபையில் தற்போது எழுந்துள்ள நிலை தொடர்பில் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் இன்று தெரிவித்த கருத்துக்கள் அடுத்து.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்