வடக்கு முதல்வரின் கோரிக்கையை முற்றாக நிராகரித்தார் எதிர்க்கட்சித் தலைவர்

வடக்கு முதல்வரின் கோரிக்கையை முற்றாக நிராகரித்தார் எதிர்க்கட்சித் தலைவர்

வடக்கு முதல்வரின் கோரிக்கையை முற்றாக நிராகரித்தார் எதிர்க்கட்சித் தலைவர்

எழுத்தாளர் Staff Writer

18 Jun, 2017 | 7:06 pm

வட மாகாணத்தில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடி தொடர்ந்தும் நீடிக்கின்றது.

முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இன்று அனுப்பியுள்ள பதில் கடிதத்தால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்டோருடன் நேற்று கலந்துரையாடிய முதலமைச்சர் விக்னேஷ்வரன் எதிர்க்கட்சித் தலைவருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் விக்னேஷ்வரன் கோரும் உத்தரவாதத்தை தம்மால் வழங்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைக் குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்படாத இரண்டு அமைச்சர்களுக்கும் எதிரான தண்டனைச் செயற்பாடு நியாயப்படுத்தக் கூடியதா என இர.சம்பந்தன் தமது கடிதம் மூலம் சி.வி விக்னேஷ்வரனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

குற்றவாளிகளாகக் காணப்படாதவர்கள் தொடர்பிலான தண்டனை நடவடிக்கையே தற்போதைய குழப்பங்கள் எழக் காரணம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் நிர்வாகத்தை நடாத்திச் செல்வதில் மாவை சேனாதிராஜாவின் வழிகாட்டலும் அரசியல் ஆலோசனைகளும் தேவைப்படும் என தேர்தலுக்கு முன்பாக கூறிய விடயத்தை நிறைவேற்றினீர்களா என்பதை தம்மைத்தாமே கேட்டுக்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சி.வி விக்னேஷ்வரனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தண்டனை நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்த நடவடிக்கைகள் தாமதிக்காது எடுக்கப்பட வேண்டுமென என இரா.சம்பந்தன் சி.வி விக்னேஷ்வரனிடம் வலியுறுத்தியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்