சம்பியன்ஸ் கிண்ணத்தை தன் வசப்படுத்தியது பாகிஸ்தான்

சம்பியன்ஸ் கிண்ணத்தை தன் வசப்படுத்தியது பாகிஸ்தான்

சம்பியன்ஸ் கிண்ணத்தை தன் வசப்படுத்தியது பாகிஸ்தான்

எழுத்தாளர் Staff Writer

18 Jun, 2017 | 9:57 pm

ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் தொடரின் நடப்பு சம்பியனான இந்தியாவை தோற்கடித்து பாகிஸ்தான் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 180 ஓட்டங்களினால் வெற்றி பெற்று பாகிஸ்தான் முதல்தடவையாக கிண்ணத்தை வெற்றிக் கொண்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் இந்தியாவுக்கு 339 எனும் வெற்றியிலக்கை நிர்ணயித்தது.

பாகிஸ்தானின் ஆக்ரோஷமான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாற்றத்தை எதிர்நோக்கிய இந்தியா 30.3 ஓவர்களுக்குள் சுருண்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அசார் அலி Fakhar Zaman ஜோடி முதலாவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டமாக 128 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை வழங்கியது.

Fakhar Zaman தனது கன்னி ஒரு நாள் சதத்தை கடந்ததுடன் 114 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

Azhar Ali 59 ஓட்டங்களுடன் Babar Azam 46 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

அபாரமாக துடுப்பெடுத்தாடிய Mohammad Hafeez 32 ஆவது ஒரு நாள் அரைச்சதத்தை கடந்ததுடன் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களை பெற்றார்.

இதற்கமைய 50 ஓவர்கள் நிறைவில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுக்களை இழந்து 338 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலளித்தாடிய இந்திய அணி 30.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.

ஓட்டங்கள் எதுவும் பெறப்படாத நிலையில் அணியின் முதலாவது விக்கெட் வீழ்த்தப்பட்டது.

அணித்தலைவர் விராட் கோஹ்லி 5 ஓட்டங்களுடன் பிடிகொடுத்து ஆட்டமிழந்த அதேவேளை, மஹேந்திரசிங் தோனி 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பந்துவீச்சில் Mohammad Amir மற்றும் Hasan Ali தலா மூன்று விக்கெட்டுக்களையும் Shadab Khan 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக Fakhar Zaman தெரிவானதுடன் தொடரின் நாயகனாக
Hasan Ali தெரிவானார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்