இந்திய மீனவர்கள் 5 பேர் கச்சத்தீவு பகுதியில் கைது

இந்திய மீனவர்கள் 5 பேர் கச்சத்தீவு பகுதியில் கைது

இந்திய மீனவர்கள் 5 பேர் கச்சத்தீவு பகுதியில் கைது

எழுத்தாளர் Staff Writer

18 Jun, 2017 | 5:47 pm

கடல் எல்லையை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐந்து இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்களின் ட்ரோலர் படகொன்றும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் சமிந்த வலாக்குலுகே தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காரைநகர் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து இராமேஸ்வரம், பாம்பன், மற்றும் மண்டபம் பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த 14 ஆம் திகதி மீனவர்கள் கடலுக்கு சென்றதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்