வவுனியாவில் வாளுடன் கைதான 6 பேருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

வவுனியாவில் வாளுடன் கைதான 6 பேருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

வவுனியாவில் வாளுடன் கைதான 6 பேருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

எழுத்தாளர் Bella Dalima

16 Jun, 2017 | 3:42 pm

வவுனியாவில் வாள் உள்ளிட்ட உயிராபத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் நேற்று (15) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

வடபகுதியில் அதிகரித்துவரும் வாள்வெட்டு சம்பவங்களைக் கருத்திற்கொண்டு சந்தேகநபர்களுக்கு வழங்கக்கூடிய அதிகூடிய தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 6 குற்றவாளிகளுக்கும் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், தலா 10,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மகாரம்பைக்குளம், கனகராயன்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 6 இளைஞர்களுக்கே நேற்று சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பெரியாறுகுளம் பகுதியிலிருந்து பூந்தோட்டம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றில் வாள், கத்தி, கைக்குண்டி மற்றும் உயிராபத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களை அனுமதி இன்று கொண்டு சென்ற குற்றச்சாட்டில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் திகதி இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்