வடக்கு முதல்வருக்கு எதிரான செயற்பாட்டிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் தொடர்பில்லை: அங்கஜன்

வடக்கு முதல்வருக்கு எதிரான செயற்பாட்டிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் தொடர்பில்லை: அங்கஜன்

வடக்கு முதல்வருக்கு எதிரான செயற்பாட்டிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் தொடர்பில்லை: அங்கஜன்

எழுத்தாளர் Bella Dalima

16 Jun, 2017 | 8:44 pm

வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சருக்கு எதிராக செயற்படுவதற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது இலஞ்சத்திற்கும் ஊழலுக்கும் எதிரான கட்சியென்பதுடன், இதன் தலைவரே நாட்டின் ஜனாதிபதியாகவும் பதவி வகிக்கின்றார் என அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இலஞ்ச ஊழலற்ற நாட்டினை உருவாக்குவது மாத்திரமின்றி, இலஞ்ச ஊழலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைகளையும் ஜனாதிபதி வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், வட மாகாண சபையின் முதல்வரால் இலஞ்ச ஊழல் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தைத் தாம் எதிர்க்கவில்லை எனவும், அவ்வாறான பணிப்புரைகள் எதனையும் ஜனாதிபதி தமக்குத் தெரிவிக்கவில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பெயரைப் பயன்படுத்தி வடக்கு முதலமைச்சருக்கு எதிராக செயற்படுவதானது அவர்களின் தன்னிச்சையான முடிவாகும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அறிக்கையூடாகக் கூறியுள்ளார்.

அவர்களின் தீர்மானத்திற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் எவ்வித தொடர்போ, பொறுப்போ கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்