வடக்கு முதல்வருக்கு ஆதரவு தெரிவித்து 15 உறுப்பினர்கள் ஆளுநரிடம் மகஜர்

வடக்கு முதல்வருக்கு ஆதரவு தெரிவித்து 15 உறுப்பினர்கள் ஆளுநரிடம் மகஜர்

வடக்கு முதல்வருக்கு ஆதரவு தெரிவித்து 15 உறுப்பினர்கள் ஆளுநரிடம் மகஜர்

எழுத்தாளர் Staff Writer

16 Jun, 2017 | 11:57 am

வட மாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்கும் மாகாண சபை உறுப்பினரகள், ஆளுநர் ரெஜினோல்ட் குரேவை சந்தித்து மகஜரொன்றைக் கையளித்துள்ளனர்.

மாகாண ஆளுநர் இல்லத்திற்கு சென்ற உறுப்பினர்களால் நேற்றிரவு இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 15 பேர் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர். வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் உறுப்பினர் க.சர்வேஸ்வரன், விந்தன் கனகரத்தினம் ஆகியோரால் ஆளுநரிடம் இந்த கடிதம் கையளிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய கட்சிகளின் 15 உறுப்பினர்கள் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

அந்த வகையில், வட மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், எம். தியாகராசா, ஜி.குணசீலன், ஆர்.இந்திரராஜா, ரீ.ரவிகரன், கே.சிவனேசன், அனந்தி சசிதரன், கே.சர்வேஸ்வரன், பீ. ஐங்கரநேசன், விந்தன் கனகரத்தினம், ஏ.புவனேஸ்வரன், எஸ்.மயூரன், ஜி.ரி.லிங்கநாதன், பீ.கஜதீபன் மற்றும் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆகியோர் குறித்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட வட மாகண கல்வி அமைச்சர் தி.குருகுலராசா மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோரில் விவசாய அமைச்சர் மாத்திரமே தனது இராஜினாமாக் கடிதத்தை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்