முதலமைச்சருக்கு ஆதரவாக வடக்கில் ஹர்த்தால்

முதலமைச்சருக்கு ஆதரவாக வடக்கில் ஹர்த்தால்

முதலமைச்சருக்கு ஆதரவாக வடக்கில் ஹர்த்தால்

எழுத்தாளர் Staff Writer

16 Jun, 2017 | 11:29 am

வட மாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

முதலமைச்சருக்கு எதிராக ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள வர்த்தக நிலையங்கள அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, அந்த பகுதிகளில் பொதுப்போக்குவரத்து சேவைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

பஸ்தரிப்பிடங்கள் வெறிச்சோடிக் காணப்படுவதாகவும் எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை, வடக்கின் பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகளும் இன்று முடக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்களும் வருகை தராமையினால் கல்வி செயற்பாடுகள் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்