நடிக்க வரும் முன்பே துல்கர் சல்மானுக்கு திருமணம் செய்து வைத்தது ஏன்: மம்முட்டி விளக்கம்

நடிக்க வரும் முன்பே துல்கர் சல்மானுக்கு திருமணம் செய்து வைத்தது ஏன்: மம்முட்டி விளக்கம்

நடிக்க வரும் முன்பே துல்கர் சல்மானுக்கு திருமணம் செய்து வைத்தது ஏன்: மம்முட்டி விளக்கம்

எழுத்தாளர் Bella Dalima

16 Jun, 2017 | 5:16 pm

மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் மலையாளத்தில் நடித்த ‘உஸ்தாத் ஹோட்டல்‘, ‘பெங்களூர் டேஸ்’, ‘சார்லி’ உள்ளிட்ட நிறைய படங்கள் வெற்றிகளை வாரிக்குவித்துள்ளன.

இவர் நடிப்பில் கால் பதிக்கும் முன்னரே, திருமண வாழ்வில் காலெடுத்து வைத்துவிட்டார்.

இந்நிலையில், நடிக்க வரும் முன்பே துல்கர் சல்மானுக்கு திருமணம் செய்து வைத்ததற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார்.

[quote]ஒரு மனிதனின் வாழ்க்கையில் உறுதியான நிலையை ஏற்படுத்துவது திருமணம் தான். திருமணம் செய்துகொண்டால் பொறுப்பு வரும். வாழ்க்கையில் முன்னேறத் தோன்றும். திருமணம் செய்து கொண்டதால்தான் நான் அறிந்து கொண்டதை பிள்ளைகளுக்குச் சொல்கிறேன். என் வழியை என் மகன் பின்பற்றுகிறான். எனவேதான் நடிக்க வரும் முன்பே அவன் விருப்பப்படி திருமணம் செய்து வைத்தோம். திருமணம் பற்றி நானும் என் மனைவியும் துல்கருடன் பேசினோம். சம்மதம் தெரிவித்ததால் மருமகள் அமல்சுபியாவை திருமணம் செய்து வைத்தோம்[/quote]

என மம்முட்டி கூறியுள்ளார்.

சமீபத்தில் மம்முட்டி தாத்தா ஆனார். துல்கர் சல்மான் – அமல் சுபியா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அந்த குழந்தைக்கு மரியம் அமீரா சல்மான் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்