சீனாவில் சிறுவர் பாடசாலை அருகே குண்டுத் தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு, 65 பேர் காயம்

சீனாவில் சிறுவர் பாடசாலை அருகே குண்டுத் தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு, 65 பேர் காயம்

சீனாவில் சிறுவர் பாடசாலை அருகே குண்டுத் தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு, 65 பேர் காயம்

எழுத்தாளர் Bella Dalima

16 Jun, 2017 | 4:58 pm

சீனாவில் சிறுவர் பாடசாலை ஒன்றின் நுழைவாயில் அருகே நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுத் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 65 பேர் காயமடைந்துள்ளனர்.

கிழக்கு சீனாவின் ஜியாங்சூ கடலோர மாகாணத்தில் உள்ள ஃபெங்ஸியான் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சிறுவர்கள், பொதுமக்கள் உட்பட 65 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தீவிரவாதத் தாக்குதலா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாக ஜின்ஹுவா செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்