அதிக விலையில் அரிசி விற்பனை: நுகர்வோர் குற்றச்சாட்டு

அதிக விலையில் அரிசி விற்பனை: நுகர்வோர் குற்றச்சாட்டு

அதிக விலையில் அரிசி விற்பனை: நுகர்வோர் குற்றச்சாட்டு

எழுத்தாளர் Bella Dalima

16 Jun, 2017 | 4:21 pm

நிர்ணய விலையை விட அதிக விலையில் அரிசி விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பல பகுதிகளிலுள்ள சந்தைகளில் நிர்ணய விலைக்கு அரிசி கொள்வனவு செய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துச் செல்வதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராச்சி நிறுவனம் தெரிவித்தது.

எனினும், நுகர்விற்குத் தேவையான அளவு அரிசி நாட்டில் இருப்பதாக நெல் விநியோக சபை அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள நெற்களஞ்சியசாலைகளில் சுமார் 10 இலட்சம் மெட்ரிக் தொன் நெல் காணப்படுவதாகவும் நெல் விநியோக சபையின் தலைவர் எம்.பீ.திசாநாயக்க குறிப்பிட்டார்.

அரிசியைத் தொகையாகக் கொள்வனவு செய்து அவற்றை மறைத்து வைத்துள்ளமையே சந்தையில் அரிசியின் விலை அதிகரிப்பதற்கான காரணம் என அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்தது.

இதேவேளை, அரிசி இறக்குமதி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு குறிப்பிட்டது.

அதற்கமைய, அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்