வாக்களித்த அரசியல்வாதிகள் கவனிக்கவில்லை: தற்காலிக முகாம்களில் அசமானகந்த மக்கள்

வாக்களித்த அரசியல்வாதிகள் கவனிக்கவில்லை: தற்காலிக முகாம்களில் அசமானகந்த மக்கள்

வாக்களித்த அரசியல்வாதிகள் கவனிக்கவில்லை: தற்காலிக முகாம்களில் அசமானகந்த மக்கள்

எழுத்தாளர் Bella Dalima

15 Jun, 2017 | 6:37 pm

மண் சரிவு அபாயம் காரணமாக இடம்பெயர்ந்த தெரணியகல – அசமானகந்த தோட்ட மக்கள் கடந்த இரண்டு வருடங்களாக தற்காலிக முகாம்களிலேயே வாழ்கின்றனர்.

தாம் வாக்களித்த அரசியல்வாதிகள் தமது பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தாமை கவலையளிப்பதாக மக்கள் தெரிவித்தனர்.

தெரணியகல நகரில் இருந்து 20 கிலோமீற்றர் தூரத்தில் அசமானகந்த தோட்டம் அமைந்துள்ளது.

மண் சரிவு அபாயம் காரணமாக 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி, இந்த தோட்டத்தைச் சேர்ந்த 31 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் தோட்டத்தில் உள்ள கொழுந்து சேகரிக்கும் மண்டபத்திலும், தோட்ட மைதானத்திலும் தங்கவைக்கப்பட்டனர்.

கடந்த இரண்டு வருடங்களாக இந்த மக்கள் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி பெரும் சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் தெரணியகல பிரதேச செயலாளரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

தோட்ட அதிகாரியிடம் இதுபற்றிக் கேட்குமாறும், மலசலக்கூட வசதிகள் அமைத்துக் கொடுப்பது தொடர்பில் தமக்கு எவ்வித பொறுப்பும் இல்லையெனவும் பிரதேச செயலாளர் பதிலளித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்