வட மாகாண முதலமைச்சரின் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கவை: தமிழ் ஈழ விடுதலை இயக்கம்

வட மாகாண முதலமைச்சரின் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கவை: தமிழ் ஈழ விடுதலை இயக்கம்

எழுத்தாளர் Bella Dalima

15 Jun, 2017 | 7:27 pm

வட மாகாண முதலமைச்சரின் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கவை என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.

கட்சியின் அரசியல் குழு இன்று கூடும் முன்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது, மறைமுகமாகத் தாம் செயற்பட வேண்டிய அவசியம் தமக்கு இல்லை எனவும் அவ்வாறு செயற்படுவதாக இருந்தால் தமது பிரதிநிதிகள் பிரேரணையில் கையொப்பமிட்டிருப்பார்கள் எனவும் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் நிதானத்தைக் கடைப்பிடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்