தபால்சேவை ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு

தபால்சேவை ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு

தபால்சேவை ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2017 | 8:17 am

தபால்சேவை ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு நேற்று (14) நள்ளிரவு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஒருவார காலத்திற்குள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதால் பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டதாக தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டுள்ளார்.

பணிப்பகிஷ்கரிப்பினால் தேங்கியுள்ள கடிதங்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை பணிப்பகிஷ்கரிப்பினால் தபால் திணைக்களத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்