டயகமயில் மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்தவர் பிணையில் விடுவிப்பு

டயகமயில் மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்தவர் பிணையில் விடுவிப்பு

டயகமயில் மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்தவர் பிணையில் விடுவிப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2017 | 7:23 am

நுவரெலியா டயகம மொனிங்டன் தோட்டத்தில் மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணை விதிக்கப்பட்டுள்ளதுடன் கடும் நிபந்தனைகளும் விதித்து நீதவான் உத்தரவிட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த சந்தேகநபரை நேற்று (14) மாலை நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மொனிங்டன் தோட்டத்தை சேர்ந்த 35 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

17 வயதான மாணவி பாடசாலைக்கு செல்லும் போது நேற்று முந்தினம் (13) காலை சந்தேகநபர் அவரிடம் தகாத முறையில் நடந்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.

சம்பவத்தில் சிறு காயங்களுக்குள்ளான மாணவி டயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் டயகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்