சி.வி.விக்னேஷ்வரனுக்கு எதிரான அரசியல் பழிவாங்கலை முற்போக்கு தமிழ் தேசிய கட்சி கண்டித்துள்ளது

சி.வி.விக்னேஷ்வரனுக்கு எதிரான அரசியல் பழிவாங்கலை முற்போக்கு தமிழ் தேசிய கட்சி கண்டித்துள்ளது

சி.வி.விக்னேஷ்வரனுக்கு எதிரான அரசியல் பழிவாங்கலை முற்போக்கு தமிழ் தேசிய கட்சி கண்டித்துள்ளது

எழுத்தாளர் Bella Dalima

15 Jun, 2017 | 8:36 pm

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்திருக்கும் அரசியல் பழிவாங்கலை வன்மையாகக் கண்டிப்பதாக முற்போக்கு தமிழ் தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

வடக்கு முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து, அவரது பதவியைப் பறிக்க முற்பட்ட தமிழரசுக் கட்சி, ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அமைச்சர்களுக்கு எதிராக விசாரணைக்குழு அமைத்து அதன் பரிந்துரையின் பேரில் நடவடிக்கை எடுக்க முற்பட்டவரை நீக்க எடுத்திருக்கும் அவசரமான, அநீதியான நடவடிக்கை எனவும் தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகம் எனவும் முற்போக்கு தமிழ் தேசிய கட்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கு சுயநலமிக்க தமிழ் அரசியல்வாதிகள் துரோகம் செய்வது முதற்தடவையல்ல எனவும் இதற்கு முன்னர் அரங்கேறிய சம்பவங்களின் போது அமைதி காத்த தமிழ் மக்கள் இனியும் அமைதி காப்பார்கள் என்று யாரும் எண்ணிவிடக்கூடாது எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் முதலமைச்சர் என்ற உயர் பதவிக்கு மக்களால் கொண்டுவரப்பட்டவரை எதேச்சாதிகாரமாகத் தூக்கியெறிய முற்பட்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்