வைத்தியசாலைகளில் டெங்கு காய்ச்சல் தீவிர சிகிச்சைப் பிரிவுகளை ஸ்தாபிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை

வைத்தியசாலைகளில் டெங்கு காய்ச்சல் தீவிர சிகிச்சைப் பிரிவுகளை ஸ்தாபிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை

வைத்தியசாலைகளில் டெங்கு காய்ச்சல் தீவிர சிகிச்சைப் பிரிவுகளை ஸ்தாபிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

13 Jun, 2017 | 7:17 am

கொழும்பு களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலுள்ள முக்கிய வைத்தியசாலைகளில் டெங்கு காய்ச்சல் தீவிர சிகிச்சைப் பிரிவுகளை ஸ்தாபிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த மாவட்டங்களில் துரிதமாக பரவி வருகின்ற டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் இதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக விசேட வைத்தியக் குழுவொன்றை பயிற்றுவிக்கவும் சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இந்த குழுவில் இணைவதற்காக வைத்தியர்கள் தாமாகவே முன்வர முடியும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

டெங்கு சிகிச்சை விசேட வைத்தியக் குழுவிற்கு 50 வைத்திய அதிகாரிகளை இணைத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 15 ஆம் 16 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு உத்தேசித்துள்ளது.

இந்த டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்காக ஆயிரத்து 500 கண்காணிப்புக் குழுக்களை பயன்படுத்தவுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரசீலா சமரவீர கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்