சீரற்ற வானிலை காரணமாக செய்கைகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை

சீரற்ற வானிலை காரணமாக செய்கைகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை

சீரற்ற வானிலை காரணமாக செய்கைகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

13 Jun, 2017 | 12:50 pm

நிலவிய சீரற்ற வானிலை காரணமாக செய்கைகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மீண்டும் நெல் பெற்றுக் கொடுப்பது உள்ளிட்ட தேவைப்படும் ஏனைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நெல் காப்புறுதி சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மீண்டும் செய்கைக்குட்படுத்த முடியாத நிலையிலுள்ள விவசாயிகளுக்கு 10000 ரூபா அதிக நட்ட ஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நெல் கொள்வனவு அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளிடமிருந்து தவணைப்பணம் பெற்றுக் கொள்ளப்படாவிடினும் அதிக பட்சமாக இந்த தொகை வழங்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வௌ்ள அனர்த்தத்தினால் மாத்தறை மாவட்டத்தில் 4000 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

காலி மாவட்டத்தில் 800 ஏக்கர் அளவிலும் பாதிப்படைந்துள்ளதாக நெல் கொள்வனவு அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் செய்கைக்குட்படுத்த முடியாத நிலையிலுள்ள விவசாயிகள் தமக்கான நட்டஈட்டை அருகிலுள்ள நெல் கொள்வனவு அதிகார சபையின் காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்