விபத்தில் சிக்கினார் `தங்கல்’ பட நாயகி

விபத்தில் சிக்கினார் `தங்கல்’ பட நாயகி

விபத்தில் சிக்கினார் `தங்கல்’ பட நாயகி

எழுத்தாளர் Bella Dalima

10 Jun, 2017 | 4:09 pm

நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர் கான் நடிப்பில் வெளியாகி பலரதும் வரவேற்பைப் பெற்றுள்ள `தங்கல்’ படத்தின் நாயகி சைரா வாசிம் காஷ்மீரில் விபத்தொன்றில் சிக்கி உயிர் பிழைத்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான `தங்கல்’ படம் சீன மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்டதுடன், தற்போது வரை 1823 கோடி ரூபா வசூலைப் பெற்றிருக்கிறது.

`தங்கல்’ படத்தில் சைரா வாசிம், கீதா போகத் என்ற இளம் வீராங்கணையாக நடித்திருந்தார். அவரது நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சைரா, தனது தோழியுடன் நேற்றிரவு தால் ஏரி வழியாக காரில் சென்று கொண்டிருந்தார்.

வேகமாக சென்ற அந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த ஏரியின் சுவரை உடைத்துக் கொண்டு நின்றது.

இதுகுறித்து பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த கார் உள்ளூர் அரசியல்வாதி ஒருவருடையது என்பது தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்