வடக்கிலிருந்து தெற்கிற்கு மனிதாபிமான ரயில் பயணம்; காங்கேசன்துறையில் ஆரம்பம்

வடக்கிலிருந்து தெற்கிற்கு மனிதாபிமான ரயில் பயணம்; காங்கேசன்துறையில் ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

10 Jun, 2017 | 8:20 pm

வடக்கிலிருந்து தெற்கிற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள ‘மனிதாபிமான ரயில் பயணம்’ இன்று காலை காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் ஆரம்பமானது.

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் இந்த ரயில் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தை இன்று வந்தடைந்ததுடன், நாளைய தினம் மாத்தறை வரை பயணிக்கவுள்ளது.

பொருளுதவியுடன் ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் இணைப்பு வலையமைப்பின் 300 உறுப்பினர்களும் இந்த ரயிலில் பயணிக்கின்றனர்.

அவர்கள் நாளை மாத்தறை – பிட்டபெத்தர டட்லி சேனாநாயக்க கல்லூரியில் சிரமதானப் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

ஜனாதிபதி செயலகம், ரயில்வே திணைக்களம் மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியன இணைந்து இந்த மனிதாபிமானப் பணியை ஏற்பாடு செய்துள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்