நியூசிலாந்து சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறியது

நியூசிலாந்து சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறியது

நியூசிலாந்து சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறியது

எழுத்தாளர் Bella Dalima

10 Jun, 2017 | 8:54 pm

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தும் ஒரு போட்டியாக நியூஸிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி அமைந்திருந்தது.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து லீக் சுற்றுடன் வெளியேறியது.

சோபியா கார்டின்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து சார்பில் ரொஸ் டெய்லர் 63 ஓட்டங்களையும், அணித்தலைவர் கேன் வில்லியம்ஸ் 57 ஓட்டங்களையும் பெற்றனர்.

நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ஓட்டங்களைப் பெற்றது.

266 ஓட்டங்களை நோக்கிக் களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் முதல் 4 விக்கெட்டுகளும் 33 ஓட்டங்களுடன் வீழ்த்தப்பட்டன.

என்றாலும், அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய ஷகிப் அல் ஹசன், மஹமதுல்லா ஜோடி நான்காவது விக்கெட்டுக்காக 224 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தை நிலைகுலைய வைத்தது.

இது பங்களாதேஷ் அணியின் எந்தவொரு விக்கெட்டுக்குமான சிறந்த இணைப்பாட்டமாகும்.

ஷகிப் அல் ஹசன் சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது ஏழாவது சதத்தையும், மஹமதுல்லா மூன்றாவது சதத்தையும் எட்டி, அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்

போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஷகிப் அல் ஹசன் தெரிவு செய்யப்பட்டார்.

இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியா தோல்வியடைந்தால் பங்களாதேஷ் அரையிறுதிக்கு நேரடியாக தகுதி பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்