நாடு இல்லை என்பதற்காக தமிழர்களை நாதியற்றவர்கள் என்று நினைத்துவிட வேண்டாம்: மனோ கணேசன்

நாடு இல்லை என்பதற்காக தமிழர்களை நாதியற்றவர்கள் என்று நினைத்துவிட வேண்டாம்: மனோ கணேசன்

எழுத்தாளர் Bella Dalima

10 Jun, 2017 | 10:41 pm

தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டபோது கண்ணை மூடிக்கொண்டு இருந்துவிட்டு, பிறகு செம்மொழி மாநாட்டை நடத்துவதால் மட்டும் தமிழ் மொழி வாழ்ந்து விடாது என அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது, தமிழகத்தில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் மனோ கணேசன், தமிழ் மொழியை வாழ வைக்க வேண்டுமானால் தமிழர்கள் வாழ வேண்டும் என குறிப்பிட்டார்.

சிறுபான்மையினராக வாழும் தமிழர்கள் சற்று அசந்துவிட்டால், அவர்களை ஆட்கொண்டு விடுவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தாய் மொழி, கலாசாரம், இனம், பண்பாடு, வரலாற்றை மறந்துவிட்டுத்தான் நாட்டில் ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்றால், அப்படியொரு ஒற்றுமை தமக்கு வேண்டாம் எனவும் மனோ கணேசன் சூளுரைத்தார்.

நாடு இல்லை என்பதற்காக தமிழர்களை நாதியற்றவர்கள் என்று நினைத்துவிட வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அமைச்சர் மனோ கணேசன் இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்