சிரச தொலைக்காட்சி இன்று 19 ஆவது வருடப் பூர்த்தியை எளிமையாகக் கொண்டாடியது

சிரச தொலைக்காட்சி இன்று 19 ஆவது வருடப் பூர்த்தியை எளிமையாகக் கொண்டாடியது

சிரச தொலைக்காட்சி இன்று 19 ஆவது வருடப் பூர்த்தியை எளிமையாகக் கொண்டாடியது

எழுத்தாளர் Bella Dalima

10 Jun, 2017 | 7:48 pm

இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்திய சிரச தொலைக்காட்சி இன்று 19 ஆவது வருடப் பூர்த்தியை எளிமையாகக் கொண்டாடியது.

இலங்கை தொலைக்காட்சித்துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில், 1998 ஆம் ஆண்டு இன்றுபோல் ஒரு நாளில் சிரச தொலைக்காட்சி நேயர்களை நாடி வந்தது.

அன்று முதல் தடைகள், தாக்குதல்களைக் கண்டு அஞ்சாது முன்னோக்கிப் பயணித்த சிரச தொலைக்காட்சி 18 வருடங்களாக இலங்கை மக்களை மகிழ்வித்து, அவர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த பல நிகழ்ச்சிகளைப் படைத்துள்ளது.

உள்நாட்டு, வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்களை வழங்கி மக்களின் அபிமானத்தை வென்ற சிரச, ரியாலிட்டி நிகழ்ச்சிகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்திய முன்னோடியாகவும் திகழ்கிறது.

இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் மக்களின் நலனுக்காக செயற்பட்ட சிரச தொலைக்காட்சி ஒவ்வொரு குடும்பத்தினதும் உறவினராக இன்றும் வீறுநடை போடுகின்றது.

அநேகமான நேயர்கள் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக இம்முறை 19 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடாது இருக்க சிரச தீர்மானித்தது.

எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வானது அனர்த்தங்களால் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் உயரதிகாரிகள், சிரச தொலைக்காட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்