ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி கடுவலை பகுதியில் ஒருவழிப் போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி கடுவலை பகுதியில் ஒருவழிப் போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி கடுவலை பகுதியில் ஒருவழிப் போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

08 Jun, 2017 | 7:27 am

மண்சரிவு எச்சரிக்கை காரணமாக ஹட்டன் கொழும்பு பிரதான வீதி, கடவலை பிரதேசத்தில் ஒரு வழிப் போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று பெய்த கன மழை காரணமாக ஹற்றன் கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேன பேரகொல்ல பகுதியில் இரு கட்டிடங்கள் தாழிரங்கியதன் காரணமாக ஹட்டன் கொழும்பு பிரதான வீதியும் தாழிரங்கியுள்ளது.

நேற்று மாலை முதல் இந்த வீதியுடனான போக்குவரத்து ஒரு வழிப்பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் இரு வீடுகளைச் சேர்ந்த மக்கள் குறித்த பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து பாதை மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால் இந்த பகுதியில் கன வாகன நெரிசல் நிலவியதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்