மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிராக சம்மாந்துறையில் கண்டனப் பேரணி

மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிராக சம்மாந்துறையில் கண்டனப் பேரணி

எழுத்தாளர் Staff Writer

08 Jun, 2017 | 1:52 pm

திருகோணமலை மூதூர் பெருவெளி கிராமத்தில் மூன்று சிறுமிகள் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சம்மாந்துரையில் மாபெரும் கண்டணப் பேரணி நடத்தப்பட்டது.

சம்மாந்துரை பகுதியைச் சேர்ந்த 24 ஆலயங்களின் நிருவாகச் சபையைச் சேர்ந்த உறுப்பினர்களும் பொதுமக்களும் இந்த பேரணியில் கலந்துக் கொண்டிருந்தனர்.

மல்வத்து பிள்ளையார் கோவில் வளாகத்தில் கனவயீர்ப்புப் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பேரணி கல்முனை – அம்பாறை பிரதான வீதியூடாக மல்வத்த விளையாட்டு மைதானத்தினை சென்றடைந்த பின்னர் கவனயீர்ப்புப் போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்