முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை  படமாகிறது

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை படமாகிறது

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை படமாகிறது

எழுத்தாளர் Staff Writer

08 Jun, 2017 | 11:41 am

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில், அவரது கதாபாத்திரத்தில் அனுபம் கெர் நடிக்கவுள்ளார்.

2006 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை பத்தாண்டுகள் இந்திய பிரதமராக பதவிவகித்த மன்மோகன் சிங், பிரதமராக தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக, அவரது ஊடக ஆலோசகரான சஞ்சய் பாரு எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் ‘தி அக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்” (The Accidental Prime Minister) என்ற பெயரில் திரைப்படம் உருவாகவுள்ளது.

இப்படத்தில் இயக்குநர் அனுபம் கெர் மன்மோகன் சிங் வேடத்தில் நடிக்கவுள்ளார் என தனது டிவிட்டர் செய்தியில் இதை தெரிவித்துள்ள அனுபம் கெர், “தி அக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்” என்ற திரைப்படத்தில் மன்மோகன் சிங் வேடத்தில் நடிக்க ஆவலுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை இழந்த மன்மோகன் சிங் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சியை, அனுபம் கெர் அடிக்கடி விமர்சித்திருக்கிறார்.

“சமகால வரலாற்றை சேர்ந்தவர்கள் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது மிகவும் சவாலானது” என்று அனுபம் கெர் கூறியுள்ளார்.

மேலும், “சவால்களை எதிர்கொள்வதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு, என்னுடைய முதல் படமான சாரன்ஷ்-இல் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து நான் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமுடன் இருக்கிறேன். எனவே, பிரதமர் மன்மோகன் சிங்கை சித்தரிக்கும் அனுபவத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இத்திரைப்படம் தொடர்பாக மன்மோகன் சிங்கிடம் இருந்து எந்த கருத்துக்களும் வெளியாகவில்லை.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்