தலன்னாவயில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழப்பு

தலன்னாவயில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Jun, 2017 | 1:38 pm

அனுராதபுரம் கெக்கிரவா பிரதான வீதியின் தலன்னாவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கெப் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி இன்று (08) அதிகாலை 12.30 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 29 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தை செலுத்திய கெப் வண்டியின் சாரதியே விபத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தின் பின் கெப் வாகன சாரதி குறித்த பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் அனுராதபுரம் பொலிஸாரால் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை அனுராதபுரம் பாதெனிய பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கொள்கலன் வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் குழந்தை ஒன்றும் ஆணொருவரும் காயமடைந்துள்ளனர்.

வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் மீது கொள்கலன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் வலாகாவீதியவைச் சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் விபத்துடன் தொடர்புடைய கொள்கலனின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்