சிறுமிகள் துஷ்பிரயோகம்: அணிவகுப்பின் போது சந்தேகநபர்களின் அங்க அடையாளங்கள் மாற்றப்பட்டனவா?

சிறுமிகள் துஷ்பிரயோகம்: அணிவகுப்பின் போது சந்தேகநபர்களின் அங்க அடையாளங்கள் மாற்றப்பட்டனவா?

எழுத்தாளர் Bella Dalima

08 Jun, 2017 | 6:50 pm

திருகோணமலை – மூதூர், மல்லிகைத்தீவில் மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அடையாள அணிவகுப்பின் போது சந்தேகநபர்களின் அங்க அடையாளங்கள் மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை சிறைச்சாலைகள் திணைக்களம் மறுத்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மீதான அடையாள அணிவகுப்பு கடந்த 5 ஆம் திகதி மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதன்போது அடையாள அணிவகுப்பில் ஈடுபடுத்தப்பட்ட சந்தேகநபர்கள் மொட்டையடித்து அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டதாக வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியிருந்தார்.

எனினும், இந்த விடயம் உண்மைக்குப் புறம்பானது என சிறைச்சாலைகள் ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான துஷார உபுல் தெனிய இன்று குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்