ஓந்தாச்சிமடம் கடற்பரப்பிலிருந்து சடலமொன்று மீட்பு

ஓந்தாச்சிமடம் கடற்பரப்பிலிருந்து சடலமொன்று மீட்பு

ஓந்தாச்சிமடம் கடற்பரப்பிலிருந்து சடலமொன்று மீட்பு

எழுத்தாளர் Staff Writer

08 Jun, 2017 | 12:05 pm

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் கடற்பரப்பிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் 119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (07) மாலை 6.15 அளவில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிக்குடி பகுதியை சேர்ந்த 61 வயதான நபரே சடலமாக மீ்ட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நீதவான் விசாரணைகளை அடுத்து இன்று (08) பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.

சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்