ஈரான் பாராளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஈரான் பாராளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஈரான் பாராளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Jun, 2017 | 12:25 pm

ஈரான் பாரளுமன்ற வளாகம் அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் அமைந்துள்ள பாராளுமன்ற வளாகத்திலும் மற்றும் இமாம் கோமெனி வணக்கஸ்தலத்திலும் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் இரட்டை தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும் 43 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தாக்குதலுடன் தொடர்புடைய நான்கு ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் தாக்குதல் நடத்திய இரண்டு பயங்கரவாதிகளும் வணக்கஸ்தலத்தில் தாக்குதல் நடத்திய இரண்டு ஆயுததாரிகளும் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற வளாகத்தில் தற்கொலைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்