மீண்டும் ராஜமௌலியுடன் இணையும் பிரபாஸ்

மீண்டும் ராஜமௌலியுடன் இணையும் பிரபாஸ்

மீண்டும் ராஜமௌலியுடன் இணையும் பிரபாஸ்

எழுத்தாளர் Staff Writer

07 Jun, 2017 | 11:23 am

பாகுபலி வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் தற்போது சாஹோ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார், அந்த படத்தை முடித்த பிறகு ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் மீண்டும் நடிக்க இருக்கிறாராம்.

பாகுபலி 2  வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் இந்தியா முழுவதும் தெரிந்த ஹீரோவாகியிருக்கிறார்.

தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவருக்கு இந்தி படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது.

இப்போது பிரபாஸ் ‘சாஹோ’ என்ற படத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

இதிலும் பிரபாஸ் ஜோடி அனுஷ்கா என்று கூறப்படுகிறது.

இந்தி, தெலுங்கு, தமிழில் தயாராகும் இந்த படத்தை சுஜீத் இயக்குகிறார், 150 கோடி ரூபா செலவில் உருவாகும் இதை வம்சி கிருஷ்ண ரெட்டி தயாரிக்கிறார்.

தற்போது அமெரிக்காவில் இருக்கும் பிரபாஸ் நாட்டிற்கு திரும்பியதும் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது, அடுத்த ஆண்டு மத்தியில் இந்த படத்தை திரையிட திட்டமிட்டுள்ளனர்.

இது தவிர ‘பாகுபலி-2’ படத்தின் இந்தி பதிப்பை வெளியிட்ட இயக்குனர் கரண் ஜோஹர், பிரபாசை நேரடி இந்தி படத்தில் ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க வைக்க விரும்பியுள்ளார்.

அதை பிரபாஸிடமே கூறினார், இது வரை பதில் சொல்லாமல் இருந்த பிரபாஸ், இப்போது அதை ஏற்க முடிவு செய்துள்ளார்.

இது பற்றி கூறிய அவர், “இந்தி பட உலகில் உடனே கால் வைக்கும் திட்டமில்லை.

ஆனால் இது இன்ட்ரஸ்டிங் ஆக உள்ளது ராஜமௌலியுடன் இத்தனை ஆண்டுகள் வேலை செய்துள்ளேன். மீண்டும் அவருடன் பணியாற்றுவது எனக்கு மிகவும் வசதியானது” என்று தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்