வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்: அனுஷ்கா எச்சரிக்கை

வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்: அனுஷ்கா எச்சரிக்கை

வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்: அனுஷ்கா எச்சரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

06 Jun, 2017 | 4:55 pm

தமிழ், தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா.

பிரபாஸ் உடன் அவர் இணைந்து நடித்த பாகுபலி படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், `பாகுபலி’ படத்தில் நடிக்கும் போதே பிரபாசுக்கும் அனுஷ்காவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி கிசுகிசுக்கப்பட்டன.

இதுகுறித்து கடந்த வாரம் அனுஷ்கா தெரிவித்த போது, நானும் பிரபாசும் படத்தில் பொருத்தமான ஜோடி தான். ஆனால், உண்மையில் நாங்கள் நல்ல நண்பர்கள் என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, நல்ல நண்பர்கள் என்றாலும் காதலர்கள் என்று தான் அர்த்தம் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.

இதனால் கோபமடைந்த அனுஷ்கா தன்னைப் பற்றி தவறான செய்திகள் பரப்பினால் அவர்களை சட்டத்தின் மூலமாக சந்திப்பேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.

முன்னதாக, இருவரும் காதலிப்பதாக வதந்தி பரப்பியமைக்காக அனுஷ்கா தனது உதவியாளர் ஒருவரை வேலையில் இருந்து நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அனுஷ்கா தற்போது `பாக்மதி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

‘பாகுபலி-2’ படத்தை அடுத்து பிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ படத்திலும் அவருக்கு அனுஷ்காவே ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்