English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
06 Jun, 2017 | 1:58 pm
திருகோணமலை மல்லிகை தீவு சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரிக்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரிக்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
இதேவேளை சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து மட்டக்களப்பு – திருகோணமலை வீதிக்கு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
பால்சேனை அரசினர் கலவன் பாடசாலை, பம்மிவட்டுவான் அரசினர் கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
காலை 7 மணிமுதல் சுமார் 2 மணித்தியாலங்கள் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இதன் போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமது கோரிக்கைகளடங்கிய மகஜர் ஒன்றை வாகரை பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.
சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு உட்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மகஜரை நீதியமைச்சர், சட்டமா அதிபர், சட்டமாஅதிபர் திணைக்களம், உயர்நீதிமன்ற நீதியரச், பிரதேச செயலாளர், ஆகியோருக்கு கையளிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
06 Jan, 2021 | 07:12 PM
06 Nov, 2020 | 08:31 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS